கொரோனா தொற்று: கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனன் குணமடைந்து வீடு திரும்பினார்!

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன் குணமடைந்து வீடு திரும்பினார்.

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன் குணமடைந்து வீடு திரும்பினார்.

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த அம்மன் அர்ச்சுனன் இருந்து வருகிறார். இவரது வீடு செல்வபுரம் அருகேயுள்ள திருநகர் பகுதியில் உள்ளது. சமீபத்தில், இவரது மகள் குடும்பத்தினர் மதுரைக்கு சென்று திரும்பியுள்ளனர்.

இதையடுத்து, வீட்டில் உள்ள 9 பேருக்கு கடந்த 29ம் தேதி மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனனின் 32 வயது மகள், 39 வயது மருமகன், 11 வயது பேத்தி ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இதனை தொடர்ந்து, மூவரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இஎஸ்ஐ மருத்துவமனையில் கடந்த 5ம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவரது பேத்தி குணமடைந்த நேற்று வீடு திரும்பினார். அதேபோல, சிகிச்சை பெற்று வந்த சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், அவரது மகள், மருமகன் ஆகியோர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறப்பாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவ குழுவினருக்கு தனது பாராட்டுக்களை, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...