கோவை கிராமப்புறங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இதுவரை ரூ.4 லட்சம் அபராதம் வசூல்

கோவை: கோவை மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமப்புற பகுதிகளில் இதுவரை முககவசம் அணியாதவர்களிடம் இருந்து சுமார் 4 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமப்புற பகுதிகளில் இதுவரை முககவசம் அணியாதவர்களிடம் இருந்து சுமார் 4 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியம் 228 ஊராட்சிகளில் 1,200 கிராமங்கள் இருக்கின்றன. இந்த பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க கிருமி நாசினி தெளிப்பு, வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் மாவட்ட சுகாதார துறையினருடன் இணைந்து உள்ளாட்சி துறை ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதுகுறித்து, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்ட ஊரக பகுதிகளில் 52 வாரச்சந்தைகள் இயங்கி வருகின்றன. இந்த வாரச்சந்தைகள் மூலம் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

கிராமப்புறங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை சுமார் ரூ.4 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. அதே போல் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி கிராமம் தோறும் அறிவுறுத்தி உள்ளோம்.

இ-பாஸ் இன்றி வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...