கோவையில் கொரோனா தொற்று மற்றும் இறப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிடும் தகவல்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் - எம்.எல்.ஏ நா.கார்த்திக்

கோவை: கோவையில் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் தொற்றினால் ஏற்பட்ட இறப்பு குறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிடும் தகவல்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று நா.கார்த்திக் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் தொற்றினால் ஏற்பட்ட இறப்பு குறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிடும் தகவல்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று நா.கார்த்திக் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

கொரோனா வைரஸ் தொற்று துவக்கத்திலிருந்து, பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் இறப்பு குறித்து அரசு தினமும் வெளியிடும் தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. தி.மு.க. உள்ளிட்ட மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தியதன் பிறகே ஜூன் 7ம் தேதிக்குப் பிறகு, மாவட்ட வாரியாக பரிசோதனை குறித்து ஒருநாள் மட்டும் தகவல் வெளியிட்டார்கள். பின்பு அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கோவை செல்வபுரம் சுற்றியுள்ள பகுதிகளில், 200 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், சுகாதாரத் துறை இதை மறுத்துள்ளதோடு, அப்பகுதியில், 35 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கோவையில் கொரோனா நோய்ப் பரவல் இல்லை, நோய்த் தொற்று குறைகிறது அல்லது நோய்த் தொற்றே இல்லை என்று போலியாக காட்ட நினைக்கிறதா கோவை மாவட்ட நிர்வாகம்..?

கொரோனாவை பொறுத்தவரை ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும்.கோவையில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்கு உதாரணம்.

ஏற்கனவே, கடந்த 29.05.2020 மற்றும் 06.07.2020 ஆகிய தேதிகளில், கோவை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கோவை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை, கொரோனா நோய்ப் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனை வாரியாக கொரோனா நோய்த் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள விவரம், இறந்தோரின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அளிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியரிடம் கேட்கப்பட்டது. அதற்கு இதுவரை எந்த பதிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்படவில்லை.

போதிய அளவுக்கு மருந்துகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் கையிருப்பு உள்ளதா? என்பது தமிழக அரசு சார்பில் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

கோவை மாவட்ட நிர்வாகம் விரைவாக செயல்பட்டு, மக்களுக்கு உண்மையான புள்ளிவிவரங்களை வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும். மேலும், தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்த 24 மணிநேர உதவி எண் ஏற்படுத்தி, இதுபற்றிய நிலவரம் குறித்து மக்கள் அதிக தகவல்கள் பெறும் வசதிகளை உருவாக்க வேண்டும்.

ஆகவே, இனிவரும் காலங்களிலாவது, கோவையில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை பரவலாக்கி, தொற்று பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான தகவலை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் இந்தத் தொற்று பரவுதல் மற்றும் இதைக் கட்டுப்படுத்துதல் விஷயத்தில் கோவை மாவட்ட நிர்வாகம் மிகவும் விழிப்புடனும், திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...