கூடலூர் பாரதிதாசன் வணிக வளாகத்தில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு..! மேல்தள கழிவறைக்குள் இருந்த ஆக்கிரமிப்பு பொருட்கள் அகற்றம்!

நீலகிரி: கூடலூர் பாரதிதாசன் வணிக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி அதிகாரிகள், மேல் தள கழிவறைக்குள் இருந்த ஆக்கிரமிப்பு பொருட்கள் அகற்றினர்.

நீலகிரி: கூடலூர் பாரதிதாசன் வணிக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி அதிகாரிகள், மேல் தள கழிவறைக்குள் இருந்த ஆக்கிரமிப்பு பொருட்கள் அகற்றினர்.

கூடலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கூடலூர் நகராட்சியின் பாரதிதாசன் வணிக வளாகம் உள்ளது. சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இந்த கட்டிடத்தில் பல இடங்களில் பழுது ஏற்பட்டு உள்ளதாகவும், இதன் மத்திய பகுதியில் உள்ள காய்கறி மற்றும் இறைச்சி விற்பனை கடைகளின் மேல் தளப்பகுதி காலியாக உள்ளதால் தண்ணீர் கசிந்து கடைகளுக்குள் வருவதாக காய்கறி வியாபாரிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதேபோல, கீழ்த்தளத்தில் உள்ள கழிவறையின் செப்டிக் டாங்க் ஆயுட்காலம் முடிந்துவிட்ட நிலையில், துர்நாற்றம் வீசுவதால் வியாபாரிகளும் பொதுமக்களும் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதாகவும், பாதுகாப்பில்லாத மேல்தள பகுதியில் மது அருந்துதல், சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் காய்கறி வியாபாரிகள் சார்பில் பாஜக அமைப்பு சார தொழிற் சங்க மாவட்ட நிர்வாகி நாகேந்திரன் மற்றும் வியாபாரிகள் நகராட்சி ஆணையர் பாஸ்கரிடம் புகார் அளித்திருந்தனர்.

இதனையடுத்து, நகராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுடன் வணிக வளாகத்தை ஆணையர் பாஸ்கர் ஆய்வு செய்தார். அப்போது, மேல்தள கட்டிடத்தில் இரண்டு கழிப்பறைகள் பூட்டிய நிலையில் இருப்பதும் அதில் வியாபாரிகள் சிலர் பொருட்களை வைத்து ஆக்கிரமிப்பு செய்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்ததோடு, சுகாதாரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கீழ்த்தளத்தில் உள்ள கழிவறைகளை மூடவும், மேல்தளத்தில் உள்ள கழிவறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், தண்ணீர் கசியும் பகுதிகளை பார்வையிட்டு தேவையான நடவடிக்கை எடுக்கவும், பயன்பாடற்ற நிலையில் உள்ள மேல் தளத்தை சிறு வியாபாரிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சமூக விரோத செயல்களை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என வியாபாரிகளிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, மேல் தளத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர அப்பகுதியை நகராட்சி ஊழியர்கள் அளவீடு செய்தனர்.

இந்த ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி, சுகாதார ஆய்வாளர் சரவணன், ஓவர்சியர் பிரபாகரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...