நீலகிரியில் இன்று 10 பேருக்கு தொற்று உறுதி; மொத்த எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில்‌ மொத்த கொரோனா நோய்த்‌ தொற்று பாதிப்பு நேற்று 150 ஆக இருந்த நிலையில், இன்று 160 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில்‌ 49 நபர்கள்‌ பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்‌.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில்‌ மொத்த கொரோனா நோய்த்‌ தொற்று பாதிப்பு நேற்று 150 ஆக இருந்த நிலையில், இன்று 160 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில்‌ 49 நபர்கள்‌ பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்‌.

இன்று புதிதாக 10 நபர்களுக்கு நோய்த்‌ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத்‌ தொடர்ந்து, மொத்தம்‌ 160 நபர்களுக்கு மாவட்டத்தில்‌ நோய்த்‌ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

49 நபர்கள்‌ பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மீீதமுள்ள 111 நபர்களில்‌ 74 நபர்கள்‌ உதகை அரசு மருத்துவமனையிலும்‌, 7 நபர்கள்‌ குன்னூர்‌ அரசு மருத்துவமனையிலும்‌, 30 நபர்கள்‌ கோவை இ.எஸ்‌.ஐ, மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையிலும்‌ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்‌.

"இன்றைய தினம்‌ வெளியூர்‌ சென்று வந்தவர்களுக்கு அதிகளவில்‌ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்‌, பொதுமக்கள்‌ அத்தியாவசிய மருத்துவத்‌ தேவைகளைத்‌ தவிர, குடும்ப விழாக்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்‌ கொள்கிறேன்‌", என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 8 ஆம் தேதி, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:

1. 51 வயது ஆண்‌, எல்லநள்ளி, கேத்தி பேரூராட்சி - தனியார்‌ நிறுவனத்தில்‌ பணிபுரிந்து வந்தவரின்‌ தொடர்புடைய நபர்

2. 38 வயது ஆண்‌, தும்மனட்டி - தனியார்‌ நிறுவனத்தில்‌ பணிபுரிந்து வந்தவரின்‌ தொடர்புடைய நபர்

3. 31 வயது ஆண்‌, எமரால்டு, உதகை ஊராட்சி - இவர் லாரி ஒட்டுநர்‌ சென்னை காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று வந்தவர்.

4. ‌19 வயது ஆண்‌, லங்டேல், உதகை ஊராட்சி - ஈரோட்டிலிருந்து வருகை பரிந்த குடும்ப உறுப்பினா்‌ மூலமாக தொற்று பரவியது

5. 64 வயது பெண்‌, லவ்டேல், உதகை ஊராட்சி - ஈரோட்டிலிருந்து வருகை பரிந்த குடும்ப உறுப்பினா்‌ மூலமாக தொற்று பரவியது

6. 42 வயது பெண்‌, லவ்டேல்‌, உதகை ஊராட்சி - ஈரோட்டிலிருந்து வருகை பரிந்த குடும்ப உறுப்பினா்‌ மூலமாக தொற்று பரவியது

7. 45 வயது ஆண்‌, லவ்டேல்‌, உதகை ஊராட்சி - ஈரோட்டிலிருந்து வருகை பரிந்த குடும்ப உறுப்பினா்‌ மூலமாக தொற்று பரவியது

8. 13 வயது சிறுமி, ‌உதகை ஊராட்சி - ஈரோட்டிலிருந்து வருகை பரிந்த குடும்ப உறுப்பினா்‌ மூலமாக தொற்று பரவியது

9. 36 வயது பெண், மேல்கவவட்டி - ராஜஸ்தானிலிருந்து வருகை புரிந்த குடும்ப உறுப்பினர்‌ மூலம்‌ தொற்று பரவியது

10. 15 வயது சிறுமி, மேல்கவவட்டி - ராஜஸ்தானிலிருந்து வருகை புரிந்த குடும்ப உறுப்பினர்‌ மூலம்‌ தொற்று பரவியது

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...