திருப்பூரில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; இன்று மட்டும் 26 பேருக்கு புதிதாக தொற்று உறுதி

திருப்பூர்: திருப்பூரில் இன்று புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த தொற்றின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் இன்று புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த தொற்றின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூரில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

"திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப் பட்டு வரும் சிறப்பு குழுக்களின் ஆய்வின் போது, முககவசம் அணியாத 719 பேர் கண்டறியப்பட்டு அவர்களிடம்.இருந்து மொத்த தொகையாக ரூபாய் 82,150 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும், நோய் தொற்றை தடுக்க முக கவசம் எவ்வாறு உதவி என்பதை பற்றியும் அறிவுறுத்தப்பட்டது", என மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்தார்.

மேலும், இன்று திருப்பூரில் புதிதாக 240 பேர் என மொத்தம் 3297 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இதோடு 229 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இன்று, ஜூலை 7 ஆம் தேதி, 792 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...