கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவினை பாதுகாப்பாக கொண்டாட அனுமதி அளிக்க கோரி கோவை மாவட்ட பாரத் சேனா அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவினை பாதுகாப்பாக கொண்டாட அனுமதி அளிக்க கோரி கோவை மாவட்ட பாரத் சேனா அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அதேபோல், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இதனிடையே, தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் தாங்கள் தகுந்த பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி விழாவினை நடத்துவதற்கு அனுமதி அளித்திட வேண்டும் என வலியுறுத்தி பாரத் சேனா அமைப்பினர் சிலைகளுடன் வந்திருந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர்.
மேலும், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தால் அரசு கூறும் விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட தயாராக இருப்பதாக தெரிவித்தனர். அதேபோல, கோவை மாவட்ட ஆட்சியர் இதனை தமிழக அரசிற்கு பரிந்துரை செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.