கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்று திறனாளிகள் மூவருக்கு ரூ.1.69 லட்சத்தில் மூன்று சக்கர வாகனத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இன்று வழங்கினார்.
கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்று திறனாளிகள் மூவருக்கு ரூ.1.69 லட்சத்தில் மூன்று சக்கர வாகனத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் இன்று வழங்கினார்.
இதன் ஒரு பகுதியாக 2020க்கான நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இன்று 8 மாற்று திறனாளிகளுக்கு வழங்க மூன்று சக்கர வாகனத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, மூன்று மாற்று திறனாளிகளுக்கு ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான வாகனங்களை இன்று வழங்கினார்.

கோவை காந்திபுரம் 2வது வீதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வில் பி.ஆர்.நடராஜன் எம்பி பங்கேற்று பயணாளிகளான சிங்காநல்லூர் கள்ளிமடையை சேர்ந்த பாலன், சூலூர் தாலுகாவிற்குட்பட்ட சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபு, பெரியகுயிலை சேர்ந்த தங்கவேல் ஆகியோருக்கு வாகனத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கொரோனா பேரிடர் காலத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகள், சுகாதார ஊழியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் என தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மக்களுக்கு இவர் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்நிகழ்வில் மாற்று திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகளும், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். வாகனத்தை பெற்றுக்கொண்ட பயனாளிகள் பி.ஆர்.நடராஜன் எம்பிக்கு மனநெகிழ்வோடு நன்றி தெரிவித்தனர்.