கோவை: கோவை மரக்கடை அருகே எலக்ட்ரானிக் கடையில் பணியாற்றிய 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மரக்கடை அருகே எலக்ட்ரானிக் கடையில் பணியாற்றிய 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மரக்கடை அருகே உள்ள மில் ரோடு பகுதியில் கே.எலக்ட்ரானிக் சோன் என்ற கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து, அங்கு பணியாற்றிய மற்ற ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 10 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து அனைவரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து கடை அடைக்கப்பட்டது. மேலும், தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தனிமை படுத்தபட்டு அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.