கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.



கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் பலி எண்ணிக்கைகள் குறைந்த பாடில்லை. குறிப்பாக இந்த தொற்றினால் பாதிக்கப்படும் வயது முதிர்ந்தவர்கள் பலியாவது தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. 

இதனால் வயது முதிர்ந்தவர்கள் வெளியே வருவதை தவிர்க்க தொடர்ந்து சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் கோவை மாவட்டத்தில் சிறியவர், பெரியவர் என பாகுபாடின்றி பல தரப்பினரும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் இன்று காலை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை 24 வீரபாண்டி பிரிவு வி.கே.வி.நகரை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பெரியநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதை தொடர்ந்து அவருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த 2ம் தேதி இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், இவரது குடும்பத்தார்களான தொடர்பில் இருந்த மகன், மகள் உள்பட 4 பேருக்கும் மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், முதியவரின் உடல்நிலை நேற்று முதலே மோசமானதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, இவரது உடல் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி அடக்கம் செய்ய தயார் படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...