கோவை: தடைகளை தகர்த்து தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுடன் சாதித்து காட்டியுள்ளார் முதுவா பழங்குடி பெண்.

தமிழக கேரள எல்லையில் வாழும் முதுவா பழங்குடிகள் பெண்கல்விக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள். பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதித்து வாழ்ந்து வருபவர்கள். ஒரு பெண் வேற்று ஆண் மகனுடன் பேசினாலே தள்ளி வைக்கும் பழக்கம் கொண்டவர்கள் ஆவர்.
இதனிடையே, அப்படிப்பட்ட கிராமத்தில் பிறந்த ஸ்ரீதேவி, கேரளாவில் பழங்குடி உண்டு உறைவிட பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயின்றுள்ளார். சமீபத்தில் வெளியான பொதுத்தேர்வில் திருச்சூர் மாவட்டத்திலேயே முதன்மையான மதிப்பெண் பெற்று கேரள அரசின் உயரிய பரிசையும் வென்றுள்ளார். இதையடுத்து, அப்பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான அனைத்து செலவுகளையும் கேரளா அரசாங்கமே ஏற்கும் என அறிவித்துள்ளது.

தனது மகளின் படிப்பிற்காக 15 கிலோமீட்டர் நடந்தும், 6 மணி நேரம் பயணித்தும் தன் மகளை படிக்க வைத்துள்ளார் செல்லமுத்து. இது தொடர்பாக அவரிடம் பேசிய போது, தனக்கு சொந்த ஊர் வால்பாறையில் உள்ள கருமுட்டி எனவும் யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள அப்பகுதியில் 50 - 60 குடும்பங்கள் தான் இருக்கிறது. பிழைப்புக்காக தமிழக, கேரள பகுதிகளுக்கு சென்று வருவதாக தெரிவித்தார்.
மேலும், விவசாயம் செய்வதற்காகவும், பள்ளிக்கல்வி பெறுவதற்காகவும் காடம்பாறை அணையிலிருந்து 15 கிலோமீட்டரில் உள்ள பூச்சி கொட்டாம் பாறைக்கு வந்தோம். இங்கு மின்சாரம், சாலை வசதியோ இருக்காது. மொபைல் போன் சிக்னல் கூட கிடைக்காது. எங்களை பொறுத்தவரை பெண் பிள்ளைகளை படிக்க வைப்பது என்பது கொஞ்சம் கடினமான காரியம் தான்.
ஆனால், தனது பெண்ணை திருச்சூர் மாவட்டத்தில் இருக்கும் சாலக்குடி மார்டன் ரெசிடன்சியல் பள்ளியில் படிக்க வைத்ததாகவும் தமிழ், மலையாளம் இரண்டும் கலந்து இருப்பதால் முதுவா மொழி பேசுவதாக தெரிவித்த அவர், முதுவா பழங்குடியில் இன்னும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பல தடைகளை தாண்டி, விடாமுயற்சி செய்து பழங்குடி இளம் பெண்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் ஸ்ரீ தேவிக்கும் அவரது பெற்றோருக்கும் வாழ்த்துக்களை பகிரலாம் நண்பர்களே!