கோவை: கோவை சூலூர் அருகே வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அருகில் வசிப்பவரை கட்டையால் தாக்கியவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
கோவை: கோவை சூலூர் அருகே வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அருகில் வசிப்பவரை கட்டையால் தாக்கியவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
கோவை சூலூர் எஸ்.ஆர்.எஸ் புரம் பகுதியில் வசித்து வருபவர் சண்முக சுந்தரம் (52). இவர் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் குமரேசன்.
இந்நிலையில், இவர்களிடையே வீட்டின் முன் இரு சக்கர வாகனம் நிறுத்துவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்த நிலையில், நேற்று காலை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதில் ஆத்திரமடைந்த குமரேசன் சண்முக சுந்தரத்தை கட்டையால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்துள்ளார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூலூர் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.