கோவை: கோவை சூலூர் அருகே மாடு திருட்டில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

கோவை சூலூர் அருகே உள்ள சின்னபுத்தூர் ஹரிஜன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி( 32). இவர் தனது வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை 5 மணியளவில் இவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டு இருந்த மாட்டின் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது மாட்டை ஒரு நபர் திருடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை பார்த்துள்ளார்.
அவரை பிடித்து அந்த நபரை நெகமம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இது குறித்து விசாரணை செய்த போலீசார் மாடு திருட்டில் ஈடுபட்ட நபர் ஜல்லிபட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சுப்ரமணியம் என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.