கொரோனா நிவாரண உதவியாக ரூ.5000 வழங்கக்கோரி வால்பாறையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

கோவை: கொரோனா நிவாரண உதவியாக ரூபாய் 5000 வழங்கக்கோரி வால்பாறையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கொரோனா நிவாரண உதவியாக ரூபாய் 5000 வழங்கக்கோரி வால்பாறையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக வேலைகளை இழந்து மிகுந்த சிரமத்தில் வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 5000 உதவி தொகையாக வழங்க வேண்டும், அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டம் சீலக்கம்பட்டி ஊராட்சி மன்றம் அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறிப்பாக, கிராமப்புறத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அம்மா உணவகம் செல்லமுடியாத சிரமத்தில் உள்ளனர் என்று தெரிவித்தனர்.

எனவே, இந்த நோய் தொற்று சூழலில் மாற்று திறனாளிகள் சந்தித்து வரும் இன்னல்கள் மற்றும் வாழ்வாதாரத்தைகருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்த உதவித்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தனர்.

மேலும், உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு 100 சதவீத ஊனமுற்றோருக்கும் மாற்றுத்திறனாளிக்கான சான்று வழங்க மறுத்து வருவதாகவும், அவர்களை 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணியமர்த்தி பணி வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...