கோவை பூமார்க்கெட்‌ பகுதியில் மலர்‌ அங்காடி புதுப்பிக்கும்‌ பணிகளை மாநகராட்சி ஆணைய‌ர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதியில்‌ உள்ள மலர்‌ அங்காடி புதுப்பிக்கும்‌ பணியினை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ கள ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதியில்‌ உள்ள மலர்‌ அங்காடி புதுப்பிக்கும்‌ பணியினை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ கள ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு நடவடிக்கைகளின்‌ தொடர்ச்சியாக, கிழக்கு, வடக்கு, மத்திய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ இன்று (07.07.2020) கள ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்லத்திற்குட்பட்ட சிங்காநல்லூர்‌ உழவர் சந்தையில்‌ மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகள்‌ நேரில்‌ பார்வையிட்டு அங்குள்ள வியாபாரிகள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ முகக்கவசம்‌ அணிந்து, போதிய சமூக இடைவெளியினை கடைபிடித்து பொருட்களை வாங்கிச்‌ செல்லுமாறு அறிவுறுத்தினார்.

சிங்காநல்லூர்‌ பேருந்து நிலையம்‌ அருகே தூய்மைப்‌ பணிகளில்‌ ஈடுபட்டிருந்த மாநகராட்சி சுகாதாரப்‌ பணியாளா்களிடம்‌ முகக்கவசம்‌ அணிவது, கைகளை அடிக்கடி கழுவுதல்‌, மற்றும்‌ பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம்‌ அணிந்து தூய்மைப்‌ பணிகளில்‌ ஈடுபட வேண்டுமெனவும்‌ அறிவுறுத்தி, மசக்காளிபாளையம்‌ பகுதியிலுள்ள அம்மா உணவகத்தில்‌ பொதுமக்களுக்கு வழங்கப்படும்‌ உணவுகளின்‌ தரம்‌ குறித்தும்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



மேலும்‌, கிழக்கு மண்டலம்‌, வார்டு எண்‌.57-ல்‌ உள்ள பாலன்‌ நகா்‌ மற்றும்‌ லால்பகதூர்‌ நகர்‌ ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ மாநகராட்சி பணியாளர்கள்‌ மூலமாக

வழங்கப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ பார்வையிட்டு அங்குள்ள பொதுமக்களிடம்‌ கேட்டறிந்தார். டி.ஜே.நகர்‌ பகுதியிலுள்ள நாத்தேக்கத்‌ தொட்டியினை பார்வையிட்டு, அப்பகுதியில்‌ சீரான குடிநீர் விநியோகம்‌ செய்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



பின்னர்‌, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.38 பயனியர்‌ மில் ரோடு பிரதான சாலையில்‌ உள்ள குடிநீர்‌ குழாய்‌ நாக்கசிவினைப்‌ பார்வையிட்டு உடனடியாக சரிசெய்யுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, எல்லைத்‌ தோட்டம்‌ ரோடு பீளமேடு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில்‌ மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ கிருமி நாசினி தெளிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபடுவதை பார்வையிட்டார்.



மேலும்‌, மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.25-ல்‌ உள்ள தேவாங்கா்‌ மேல்நிலைப்பள்ளி மைதானத்தில்‌ தற்காலிகமாக செயல்பட்டு வரும்‌ மலர்‌ அங்காடி வியாபாரிகளுக்கு கையுறைகள்‌ அணிவதன்‌ பயன்பாட்டை விவரித்து, கையுறைகளை வழங்கினார். பூமார்க்கெட்‌ பகுதியிலுள்ள மலர்‌ அங்காடி புதுப்பிக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ உத்தரவிட்டார்.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...