கோவை: ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா தொற்று தீவிரமடைய வாய்ப்புள்ளதால், காவலர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்ற காவல் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையாளர், சுமித் சரண் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா தொற்று காலத்தில் கோவை மாநகர காவல் துறை சிறப்பாக செயல்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
மேலும் ஒரு சிறிய தவறு செய்தால் அனைத்து நல்ல விஷயங்களை மறக்கடித்து விடும் என கூறிய அவர் வரும் நாட்களில் கவனமுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், கொரோனா தொற்று குறைந்து வந்துள்ள நிலையில் தற்போது அதன் பாதிப்பு அதிகரித்து உள்ளது. எனவே, காவலர்களுக்கு வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சோதனை செய்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதோடு, நமக்காக மட்டுமல்லாமல் உடன் பணியாற்றும் சக ஊழியரின் நலன் கருதி பரிசோதனையை கண்டிப்பாக செய்ய வேண்டும் எனவும், பயம் காரணமாக சிலர் தயங்குவதாகவும் இதில் பயப்பட ஒன்றுமில்லை தானாக முன்வந்து சோதனை செய்து கொண்டு தனிமை படுத்திகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதோடு, அதிகாரிகளுடன் மனம் விட்டு பேசுவதுடன், கடமையை சிறப்பாக செய்வதுடன் பொறுப்பாகவும் பொறுமையாகவும் பணியை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், வரும் மாதங்களில் கொரோனாவின் பாதிப்பு சற்று கடினமாக இருக்கும் எனவும் தினமும் வாகனத்தை சுத்தம் செய்தல் கிருமி நாசனி தெளித்தல் உள்ளிட்டவைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என காவலர்களுக்கு தெரிவித்தார்.
கோவையில் காவல் துறை இதுவரை சிறப்பாக செயல்பட்டு உள்ளதாக பொதுமக்களிடம் பாராட்டுகள் வருவதாகவும், கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்கள் சகிப்பு தன்மை கொண்டு செயல்பட வேண்டும் என்ற கூறி, களத்தில் பணியாற்றும் அனைவருக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தார். இதன் பின்னர் காவல் அதிகாரிகளுக்கு முக கவசங்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையாளர், பாலாஜி சரவணன், குற்றபிரிவு துனை ஆணையர் உமா, போக்குவரத்து துனை ஆணையர் முத்தரசன், காவல் நிலையை ஆய்வாளர்கள் மற்றும் துனை ஆணையர்கள் என பலர் பங்கேற்றனர்.