கோவை: கூடலூரில் பணியின் போது மாரடைப்பால் ஆயுதப்படை காவலர் இறந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் பணியில் இருந்தபோது உதகை ஆயுதப்படை பிரிவு தலைமை காவலர் ஒருவர் மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளார்.
குன்னூரை அடுத்த கொல்லிமலை - செம்மந்தாடா கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (51) ,இவர் உதகையில் உள்ள ஆயுதப்படை காவல் பிரிவில் தலைமை காவலராக பணியில் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம், கூடலூரில் லாரிக்குள் தீவைத்துக் கொண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஓட்டுனரின் உடல் அடக்க பாதுகாப்பு பணிகளுக்காக நேற்று முன்தினம், கருணாகரன் உதகையிலிருந்து காவலர்களுடன் கூடலூர் வந்துள்ளார்.
இந்த நிலையில் செவ்வாய்க் கிழமை காலையில் காவல்துறை வாகனத்தில் சுயநினைவு இல்லாமல் கிடந்த அவரை உடன் பணிபுரிந்த காவலர்கள் உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர், இந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.