கொரோனா தொற்று எதிரொலி: கோவை செல்வபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து மூடல்!

கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே நாளில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டது.



கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே நாளில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டது. 

கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, கோவை செல்வபுரம் அருகே அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 200 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இன்று 116 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

இதனை தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

அதேபோல, கொரானோ தடுப்பு நடவடிக்கையாக அசோக் நகர், பெத்தேகவுண்டர் வீதி, வைசியாள் வீதி, பிக் பஜார் வீதி, கருப்ப கவுண்டர் வீதி உள்ளிட்ட பகுதிகளும், சுந்தரம் வீதி, கெம்பட்டி காலனி மற்றும் பூமார்கெட் பகுதிகளில் உள்ள அனைத்து வீதிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டது. 

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...