கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் இயங்கி வரும் நகை பட்டறையின் உரிமையாளர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் மாருதி கோல்டு டிரேடர்ஸ் என்ற நகை பட்டறை இயங்கி வருகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் நடத்தி வந்தார்.
இந்நிலையில், அங்கு பணியாற்றிய 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து தொற்று ஏற்பட காரணமாக இருந்த நகை பட்டறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது. அதேபோல, மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நகை கடைகள் மற்றும் பட்டறைகள் இயங்க மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
இந்த நிலையில், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல் உதவி ஆணையாளர் ரவி அளித்த புகாரின் பேரில் மாருதி கோல்டு டிரேடர்ஸ் உரிமையாளர் மீது செல்வபுரம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணா காய்கறி மார்கெட்டில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்த 2 பேர் நகை பட்டறையில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து 150 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.