புத்தக பிரியர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் "valley of hope -moyar and vultures"
நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் வனப்பகுதிகள் சந்திக்கும் பகுதியான மாயாறு பள்ளத்தாக்கு பற்றியும் அங்கு வாழும் பாறு கழுகுகள் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார் புகைப்படக்காரர்கள் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சியாளரான பைஜு.

இந்த வனப்பகுதியில் மட்டும் தான் புலி, யானை, மான் வகைகள், பிண திண்ணிக் கழுகுகள், கழுதைப்புலி, நன்னிர் முதலைகள், மீன்கள், பறவை மற்றும் பட்டாம் பூச்சியினங்கள் அனைத்துமே இப்பல்லுயிரி கோளத்தில் காண முடியும்.
கிழக்கு தொடர்ச்சி மலையும், மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் பகுதியாக இந்த வனப்பகுதி அமைந்து உள்ளதால் அநேக கானுயுர் புகைப்படக்காரர்களுக்கு இப்பகுதி சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது.
இவ்வளவு அழகு வாய்ந்த மாயாறு பற்றியும் "valley of hope "புத்தகத்தை பற்றியும் அவரிடம் தொடர்ந்து பேசினோம். முழுக்க முழுக்க பயணம் கலந்த பாறு கழுகுகள் பற்றியும் மாயாறு என்ற உயிர் கோளத்தைப்பற்றித் தெரிந்து கொள்ள ஏதுவாக இந்த நூல் கண்டிப்பாக அமையும். இந்தியாவில் உள்ள 90க்கு மேற்பட்ட வனப்பகுதிகளுக்கு சென்றுள்ளேன். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து வனவிலங்கு கணக்கெடுப்பிலும் கலந்து கொண்டு இருக்கிறேன். ஆனாலும் முதுமலை காடுகள் மீது எனக்கு தனி ஈர்ப்பு தான். இங்கு தான் மாயாறு என்ற ஒரு அழகிய பல்லுயிரிக்கோளத்தை காண முடிந்தது. சொல்லப்போனால் பாறு கழுகுகளை முதன் முறையாக இங்க தான் பார்த்தேன்.
200 வருடங்களுக்கு முன்னர் அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட பாறு கழுகுகள் அழிந்து வரும் இனமாக காணப்படுவதால் அதிக கவனம் செலுத்தப்படுவதாக கூறுகிறார். 250 மேற்பட்ட பாறு கழுகுகள் இங்கு வாழ்கிறது. அதற்கு தேவையான உணவை இறந்து கிடக்கும் விலங்கினங்களை தின்று சுற்றுச்சூழலை காத்து வருகிறது. இவற்றிற்கு பெரும் ஆபத்தாக இருப்பது கால்நடைகளுக்கு வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் டைக்குளோபினாக் மருந்து தான். 2006 ஆம் ஆண்டு இம்மருந்தை அரசாங்கம் தடை செய்து இருந்தாலும் மருந்து கடைகள் கிடைப்பதால் பயன்படுத்தி வருகிறார்கள். அதை முற்றிலும் தடை செய்யப்பட்டால் மட்டுமே இவ்வுயுரினத்தை காக்க முடியும் என்கிறார். கிட்டத்தட்ட 30 காட்டு நாய்கள் ஒரு புள்ளி மானை வேட்டையாடுவதை பார்த்த இடமும் மாயாறு தான். 6 வகையான பாறு கழுகுகள் இந்த நிலப்பரப்பிற்கு வருவது என்பது இங்குள்ள உயிர்சூழ்நிலை தான் என்று கூறுவேன்.
மேலும் இங்குள்ள தோடர் பழங்குடி மக்கள் king vulture-ஐ பூசாரி கழுகு என்றே அழைப்பர். தங்களுடைய முன்னோர்கள் கழுகு வடிவில் வருவதாக நம்பிக்கை கொள்கிறார்கள்.சில வருடங்களுக்கு முன்னர் பழங்குடியினர் கால்நடைகள் எல்லாம் வனப்பகுதியில் மேய்ப்பதான் வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு வேளை அவை இறந்தால் அப்படியே விட்டு சென்றுவிடுவர். இறந்த கால்நடை எல்லாம் ஆகாய துப்பரவாளர்களரான கழுகுகளுக்கு உணவாக மாறிவிடும் இது தான் காலம் காலமாக நடைபெற்று வந்தது. இந்த நடைமுறையில் மாற்றம் வரவே இவ்வினம் குறையவும் தொடங்கியுள்ளது என்கிறார்.
மாயாற்று பகுதியில் பாறு கழுகுகளின் nesting சொல்லக்கூடிய அதன் கூடுகளை இரண்டு ஆண்டுகளாக பதிவு செய்து இருக்கிறேன். அது கண்டிப்பாக இதன் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்கிறார்.
புத்தக வெளியீடு:
Valley of hope -moyar and vultures,
Published by don books,
Kottayam,
Kerala.
Contact :9944938811.