கோவை கொடீசியா வளாகத்தில்‌ கொரோனா தொற்று சிகிச்சையளிக்க பிரத்யேக கண்காணிப்பு மையம்‌ தயார் - மாவட்ட ஆட்சியர்

கோவை: கோவையில் கொடீசியா வளாகத்தில்‌ கொரோனா சிகிச்சைக்கென்று அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கண்காணிப்பு மையம்‌ தயார்நிலையில்‌ உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் கொடீசியா வளாகத்தில்‌ கொரோனா சிகிச்சைக்கென்று அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கண்காணிப்பு மையம்‌ தயார்நிலையில்‌ உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம்‌, கொடீசியா வளாகத்திலுள்ள அரங்கில்‌ கொரோனா சிகிச்சைக்கென்று அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கண்காணிப்பு மையத்தினை நேற்று (06.07.2020) மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.



இந்த ஆய்வின்‌ போது., மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராமதுரைமுருகன்‌, துணை இயக்குநர்‌ (சுகாதாரப்பணிகள்‌) ரமேஷ்குமார்‌ மாநகராட்சி நகர்‌ நல அலுவலர்‌ ராஜன்‌ மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

பின்னர்‌ மாவட்ட ஆட்சியர் அவர்கள்‌ தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தில்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று தடுப்பு நடவடிக்கைகள்‌ தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், கோவை மாவட்டத்தில்‌ அதிகளவில்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று குறித்த பரிசோதனைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனையில்‌ தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின்‌ குடும்பத்தினர்‌, அருகில்‌ வசிப்போர்‌, தொடர்பில்‌ இருந்த நபர்கள்‌ ஆகியோருக்கு தொடர்‌ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா வைரஸ்‌ தொற்றால்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌ வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.



கோவை மாவட்டத்தில்‌ கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும்‌ வகையில்‌ கோவை இ.எஸ்‌.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை COVID-19 சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மேலும்‌, அரசு அறிவுரை மற்றும்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ சிறப்பு முயற்சியாக, கொரோனா அறிகுறியில்லாத நிலையில்‌ தொற்று உள்ளவர்களுக்கு என தனியாக சிகிச்சை அளித்திட ஏதுவாக கோவை கொடிசியா வளாக அரங்கில்‌ 286 படுக்கை வசதிகளுடன்‌ அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கண்காணிப்பு மையத்தில்‌ கழிப்பிடம்‌, படுக்கை வசதிகள்‌, அடிப்படை வசதிகள்‌, சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான உணவு போன்ற அனைத்தும்‌ வசதிகளும்‌ சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மையம்‌, கொரோனா அறிகுறியில்லாத நிலையில்‌ தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்திட தயார் நிலையில்‌ அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும்‌ சுகாதாரத்துறை ஆகிய துறைகளின்‌ ஒருங்கிணைப்பு மற்றும்‌ மேற்பார்வையில்‌ இம்மையம்‌ செயல்படும்‌. இம்மையத்தில்‌ 24 மணி நேரமும் மருத்துவர்கள்‌, மருத்துவ பணியாளர்‌ மற்றும்‌ சுகாதார பணியாளர்கள்‌ சுழற்சி முறையில்‌ பணியாற்றவுள்ளனர்‌ என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., தெரிவித்தார்‌.



அதனைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சியில்‌ நேற்று தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான அசோக்‌ நகரில்‌ மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...