கோவையில் மாங்கரை சோதனை சாவடி அருகே டிப்பர் லாரி மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலி!

கோவை: கோவையில் மாங்கரை சோதனை சாவடி அருகே டிப்பர் லாரி மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை: கோவையில் மாங்கரை சோதனை சாவடி அருகே டிப்பர் லாரி மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் மாங்கரை சோதனை சாவடி அருகே வசித்து வருபவர் பழினிச்சாமி(70). இவரது மனைவி மாரம்மாள். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பெரிய தடாகம் பிரிவு பகுதியில் உள்ள அடுமனை ஒன்றில் காசாளராக பணியில் சேர்ந்து உள்ளார்.



இந்நிலையில், வழக்கம் போல் இன்று காலை 6 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றபோது செங்கல் சூளைக்கு பயன்படுத்தப்படும் மண் எடுத்த சென்ற டிப்பர் லாரி மோதியதில் பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

இதனை கண்ட அவரது இளைய மகனின் நண்பர் TKT NPK என்ற டிப்பர் லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக தகவல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, அவரது மகன் சின்னதடாகம் நஞ்சுண்டாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதலில் இதனை டிப்பர் லாரியின் உரிமையாளர் ஒப்புகொள்ள மறுத்துள்ளார். பின்னர் ஒப்புகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் பழனிச்சாமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பழனிச்சாமியின் மகன் கூறுகையில், டிப்பர் லாரியில் மண் எடுத்து வாகனத்தை ஓட்டி வந்தது 16 வயது சிறுவன் எனவும் இந்த பகுதியில் மண் எடுக்க தடை உள்ள நிலையில் மண் கடத்தல் அதிக அளவில் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். சிறுவன் அதிவேகமாக வாகனத்தை இயக்கி மோதியதில் தனது தந்தை உயிரிழந்ததாக கூறியவர், வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார்.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...