கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து ரத்த தானம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்போடு மாற்று இடம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவை: தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து ரத்த தானம் செய்பவர்களுக்கு உரிய அனுமதியும் பாதுகாப்போடு ரத்த தானம் செய்ய மாற்று இடம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோவை மாவட்ட ரத்த தானம் செய்பவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மனு அளித்தனர்.

கோவை: தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து ரத்த தானம் செய்பவர்களுக்கு உரிய அனுமதியும் பாதுகாப்போடு ரத்த தானம் செய்ய மாற்று இடம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோவை மாவட்ட ரத்த தானம் செய்பவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மனு அளித்தனர்.

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் இருந்து அறுவை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு தேவைப்படும் ரத்த வகையை 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், கொடையாளர்களை ஒருங்கிணைத்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக நோயாளிகளுக்கு ரத்த தானம் செய்ய அரசு மருத்துவமனைக்கு வர அச்சப்படுகின்றனர். கொரொனா எதிரொலி காரணமாக கல்லூரி மற்றும் பெரும்பாலான நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டதால் ரத்த தானம் வழக்கத்தை விட குறைவாக உள்ளது.

இந்த நிலையில், அரசு மருத்துவமனை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலோ அல்லது சமூக கூடத்திலோ வைத்து ரத்த தானம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர இரத்த தான ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் சிங்காநல்லூர், பீளமேடு, செல்வபுரம், குனியமுத்தூர் , போத்தனூர், காந்திபார்க் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்கள் கொரொனா தொற்று அதிகமுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து ரத்த தானம் செய்ய வந்த 10 பேரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் திருப்பி அனுப்பியதாகவும் இதனால் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ரத்த தானம் வழங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகத் தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்ய வருபவர்களுக்கு கொரொனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்த பின்பே ரத்ததானம் வாங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து தான் அதிகமான குருதி கொடையாளர்கள் இருப்பதாகவும் கொடையாளர்களுக்கு கொரொனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்து தானம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...