ஊடகவியலாளர்களை மிரட்டும் வகையில் பேசி வரும் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்தல்!

கோவை: ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை மிரட்டும் வகையில் பேசி வரும் மாரிதாஸ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை: ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை மிரட்டும் வகையில் பேசி வரும் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

ஊடகம் என்பது சமூகத்தை பிரதிபலிக்கும் வண்ணம், ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். சாமானிய மக்களின் வேதனைக் குரல்கள் ஊடகங்கள் வழியே ஒலிக்கப்படுகிறது. மேலும், அரசின் கொள்கைகளும், நலத்திட்டங்களும் மக்களை சென்றடைகிறதா என்று கண்காணிக்கும் வேலையையும் ஊடகங்களே முன்னின்று செய்து வருகின்றன.

இப்படிப்பட்ட ஊடகங்களையும், ஊடகங்களில் பணியாற்றுவோரையும் ஒரு சிலர் தங்களது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக, அச்சுறுத்தும் விதமாக ஊடகவியலாளர்களுக்கு நோக்கம் கற்பிப்பதுடன், அவர்களின் வீட்டில் உள்ளோரையும் சமூக ஊடகங்களில் பின் தொடர்ந்து கண்காணிக்கும் மிகக் கேவலமான செயல்களில் ஈடுபட்டு மிரட்டி வருகின்றனர்.

ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்திப் பேசிய எஸ்.வி.சேகர் போன்றோர் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்காததன் விளைவே, இம்மாதிரியான வெற்று மனிதர்களிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்கள்.

யூ டியூப்பில் ஒரு பதிவை போட்டு நாள்தோறும் இம்மாதிரியான உளறல்களில் ஈடுபடுவோர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இது போன்று பொதுவெளியில் பத்திரிகையாளர்களின் படங்களை போட்டு பொய்யாக கட்டுக்கதைகளை சொல்லி, அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எதிராக ஆபத்து நேரும் வகையில் தூண்டிவிடும் தரம் தாழ்ந்தவர்களை செயல்படாத வகையில் அரசு முடக்க வேண்டும் என்று தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...