திருப்பூர்: கொரோனா வைரஸ் சிகிச்சை முறை தொடர்பான வெளிப்படையான அறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

தமிழகத்தின் திருப்பூர் தவிர மற்ற பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு வந்துள்ளவர்களின் எண்ணிக்கை தேதி வாரியாக வெளியிட வேண்டும், திருப்பூர் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் குறித்த விவரத்தை வெளியிட வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.
மேலும், திருப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களின் விவரங்களை தேதிவாரியாக வெளியிட வேண்டும், திருப்பூர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட முழு உடல் கவசங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் குறித்த தகவலை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.