கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே நாளில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே நாளில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கோவையில் நேற்றைய நிலவரப்படி 741 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிப்படைந்துள்ளனர். இதில் கோவை செல்வபுரம் பகுதியில் தினந்தோறும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், செல்வபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், பரிசோதிக்கப்பட்ட நபர்களில் 116 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி மற்றும், நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் வீடு அப்பகுதியில் உள்ளதும், அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.