கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள் மந்தம்; போக்குவரத்து நெரிசலால் சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாமல் மக்கள் அவதி

கவுண்டம்பாளையம் மேம்பால பணிகள் மந்தம்; போக்குவரத்து நெரிசலால் சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாமல் மக்கள் அவதி

கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் மந்தமாக நடைபெறுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாமல் மக்கள் அவதியடைகின்றனர்.

கோவை கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டம் வரை சுமார் ஆயிரம் மீட்டர் நீளத்தில் சுமார் 29 துாண்களுடன் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதே போல ஜி.என் மில்ஸ் சந்திப்பில் சுமார் 670 மீட்டர் நீளத்தில் சுமார் 15 துாண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்கான பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது, ஒரு ஆண்டு ஆகியும் கூட பணிகள் மிகவும் மந்தமாக நடப்பதால் மக்கள் மிகவும் சீரமம் அடைந்துள்ளனர். 



ஊரடங்கால் மேம்பால பணிகள் பாதிக்கப்பட்ட போதிலும், தளர்வுகள் அளித்ததை அடுத்து மீண்டும் தற்போது மேம்பால பணிகள் நடந்து வருகிறது. ஆனால் வேலைக்கு குறைந்த அளவே ஆட்கள் வருவதால் மேம்பால பணிகள் மந்தமடைந்துள்ளன.

இந்த மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டால் அதில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை, 70 சதவீதமாகவும், மேம்பாலம் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலையில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை, 30 சதவீதமாகவும் இருக்கும். இதனால், குறிப்பிட்ட இரண்டு பகுதிகளிலும் போக்குவரத்து நெருக்கடி கணிசமாக குறையும். 

இதனிடையே மேம்பால பணிகள் தாமதம் அடைவதால் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், சமூக இடைவெளியை பின்பற்ற முடியாமல் மக்கள் மிகுந்த அவதியடைந்து வருவதால்,

மேம்பால பணிகளை துரிதப்படுத்தி விரைவில் மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...