கோவை துடியலூர் சுகாதார மையத்தில்  மருத்துவர் இல்லாததால் ஆட்டோவில் பிரசவித்த பெண்..!

கோவை துடியலூர் சுகாதார மையத்தில்  மருத்துவர் இல்லாததால் ஆட்டோவில் பிரசவித்த பெண்..!

கோவை: கோவையில் ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தினால், ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண் ஆட்டோவிலேயே பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 

கோவை துடியலூரை அடுத்த ராக்கிபாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர், பீகாரைச் சேர்ந்த கெளதம் மற்றும் ஜோதிகுமாரி தம்பதியினர். நிறைமாத கர்ப்பிணியான, ஜோதிகுமாரி அப்பகுதியில் உள்ள நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய அனைத்து பரிசோதனைகளும்

துடியலூரில் உள்ள நகர்புற அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில், ஜோதிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவர் கணவர் ஆட்டோ மூலம் துடியலூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். 



மருத்துவமனையில், செவிலியர் தவிர மருத்துவர் யாரும் இல்லாததால் பிரசவம் பார்க்க முடியாது என கூறி கோவை அரசு மருத்துவமனை அல்லது தாளியூர் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அங்குள்ள ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, ஜோதிகுமாரி பிரசவ வலியால் துடித்ததால் துடியலூரில் உள்ள ஏதாவது தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்க்க சொல்லி முடிவு செய்து, அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். 

ஆனால், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் சிகிச்சை அளிக்ககூடாது என சுகாதாரத்துறை உத்தரவின் காரணமாக, தனியார் மருத்துவமனைகள் அவரை அனுமதிக்க மறுத்து விட்டனர்.

செய்வதறியாது, நின்ற கௌதம்கடைசியில் கோவை அரசு மருத்துவமனைக்கு செல்ல முடிவெடுத்து, 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துவிட்டு ஆம்புலென்ஸுக்காக, தொப்பம்பட்டி பகுதியில் ஆட்டோவில் பிரசவ வலியில் துடித்து கொண்டிருந்த மனைவியுடன் காத்திருந்தார்.

இந்நிலையில், பிரசவ வலியால் துடித்த ஜோதிகுமாரிக்கு பனிக்குடம் உடைந்து ஆட்டோவிலேயே பிரசவமானது. அவருக்கு 1 கிலோ 700 கிராம் எடையுடன்அழகிய பெண் குழந்தை பிறந்தது. 



ஆனால், தொப்புள் கொடி அறுபடாமல் இரத்தத்துடன் இருந்ததால்என்ன செய்வதென்று தெரியாமல் அவரது கணவர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் அருகில் உள்ள சாய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

கொரோனா பரிசோதனை செய்யாமல் சிகிச்சை அளிக்ககூடாது என்ற சூழ்நிலையிலும், அந்த பெண்ணின் நிலைமையை கண்டு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள்குழந்தையின் தொப்புள் கொடி மற்றும் நஞ்சை அகற்றி தாய், சேய் இருவரையும் காப்பாற்றினர்.

இதனையடுத்து,

கொரோனா பரிசோதனை

செய்ய தாளியூர் அரசு சுகாதார மையத்திற்கு அனுப்பி 

வைக்கப்பட்டார்.

அரசு சுகாதார மருத்துவமனையில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என அறிவிப்பு உள்ள நிலையில், இக்கட்டான நேரத்தில் பிரசவம் பார்க்கப்படுவதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரங்களில் மருத்துவர்கள் அங்கு பணியில் இல்லாத காரணமாக அவரச சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி பெண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கோ அல்லது தாளியூர் அரசு மருத்துவமனைக்கோ செல்லவேண்டிய நிலை உள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்க முடியாத காரணத்தால் தான் அரசு மருத்துவமனையை பெரும்பாலான மக்கள் நாடி வரும் நிலையில், சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்பட வேண்டும் எனவும்மருத்துவர்களை பணியில் இருப்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்பதே என பொதுமக்களின் எதிர்ப்பார்பாக உள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...