திருப்பூரில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பின் எண்ணிக்கை 204 ஆக உயர்வு

திருப்பூரில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பின் எண்ணிக்கை 204 ஆக உயர்வு

திருப்பூர்: திருப்பூரில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், பாதிப்பின் எண்ணிக்கை 204 ஆக உயர்ந்துள்ளதாக, என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, நாளுக்கு நாள் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தாக்கம் குறைவாக இருந்தாலும், மூன்று வாரங்களுக்கு முன்பு 115 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், இன்று 204 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 

இன்று புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள ஆறு பேர் -- அனுப்பாளையத்தைச் சேர்ந்த 50 வயதான நபர், சமாளபுரம் பல்லடம் பகுதியில் உள்ள 53 வயதான ஆண், பிரைம் என்கிளேன்ட் அபார்டமென்ட்டில் இருந்த43 வயது ஆண், 29 வயதான நாதாகடையூரை சேர்ந்த ஆண், 47 வயதான தாந்தோனி நகரை சேர்ந்த பெண் மற்றும் ரோடோமைல் அப்ரேசல் நியூ திருப்பூர் பகுதியை சேர்ந்த 32 வயதான பெண், அடங்குவர். 

மேலும், இன்று 140 பேர் உட்பட 3529 பேர் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 312 பேர் இதுவரை 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாகவும் ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார். 

இதோடு 202 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 

கடந்த 28 ஆம் தேதி முதல்கோவை தனியார் மருத்துவமனையில் கொரோனா அறிகுறியோடு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தசுப்ரமணிய செட்டியார் தெருவைச் சேர்ந்த 75 வயதான ஆண் இன்று காலைசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று இல்லை என சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளதாகவும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர்தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...