முன்னாள் சன் தொலைக்காட்சி செய்தியாளர் விபத்தில் மரணம் ; கோவை பத்திரிகையாளர்கள் சார்பில் இரங்கல்

திருப்பூரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த முன்னாள் சன் தொலைக்காட்சி நிருபர் சந்தோஷ் வேலாயுதத்திற்கு, கோவை மாவட்ட அனைத்து பத்திரிக்கையாளர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கோவை: திருப்பூரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த முன்னாள் சன் தொலைக்காட்சி நிருபர் சந்தோஷ் வேலாயுதத்திற்கு, கோவை மாவட்ட அனைத்து பத்திரிக்கையாளர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கோவை காரமடையை சேர்ந்த சந்தோஷ் வேலாயுதம் (38) கடந்த 2010ஆம் ஆண்டு சென்னையில் சன் தொலைக்காட்சியில்

செய்தியாளராக பணியில் சேர்ந்தார். இவர் சென்னையிலிருந்து 2014 ஆம் முதல் கோவையில் பணியாற்றிவந்தார். இதனையடுத்து தற்போது திருப்பூர் நியூஸ் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த அவர் திருமுருகன் பூண்டி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சைக்கு அளிக்கபட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 12.20 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

இந்தகவலையறிந்து அதிர்ச்சியடைந்த கோவை பத்திரிகையாளர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்து உள்ளனர்.

அனைவருடனுடம் அன்பாக பழக கூடிய ஒரு நல்ல நண்பனை இழந்து விட்டதாக அனைவரும் வேதனை தெதிவித்துள்ளனர்.

இவர் கோவை பிரஸ் கிளப் நிர்வாகியாக 2018-19 ம் ஆண்டு செயற்குழு உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மனைவி திவ்யா மற்றும் தீக்‌ஷா என்ற பெண் குழந்தையை விட்டும், பத்திரிக்கை நண்பர்களை விட்டு பிரிந்து சென்ற சந்தோஷ் வேலாயுதம் மறைவிற்கு கோவை மாவட்ட அனைத்து பத்திரிக்கையாளர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...