திருப்பூர்: திருப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்துடன் வந்த நபருக்கு பரிசோதனை செய்யாமல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி அலட்சியம் காட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூரை சேர்ந்த 30 வயது மிதக்கத்தக்க நாளிதழ் செய்தியாளருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், ஜூலை 2 ஆம் தேதி அன்று அவருக்கு தொண்டை வலி இருந்ததால், கொரோனா தொற்று இருக்குமோ என்கிற சந்தேகத்தின் பேரில், திருப்பூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அப்போது, இவரை பரிசோதித்த மருத்துவர்கள், காய்ச்சல் இல்லையா என்று கேட்டுள்ளனர். தொண்டை வலி மட்டும் தான் உள்ளது என பாதிக்கபட்ட செய்தியாளர் தெரிவிக்கவே, அவருக்கு எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கி அனுப்பி வைத்துவிட்டனர்.
மருத்துவர்கள் பரிசோதனை தேவையில்லை என்று சொன்னபோதும், அவர் தான் செய்தியாளர் என்பதால் பல இடங்களுக்கு சென்று வர வேண்டி உள்ளதால், பரிசோதனை செய்து கொள்வதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர் உடல்நிலையில் மேலும் சில தொந்தரவுகள் ஏற்படவே, அன்றைய தினம் தானாகவே பல்லடம் அரசு மருத்துவமனை மையத்துக்கு சென்று, சளி பரிசோதனை செய்துள்ளார்.
மேலும், அவர் கடந்த 2 இரண்டு நாட்களாக பணியில் ஈடுபட்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு, திடீரென அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் அன்றிரவு வீட்டில் இருந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது குடும்பத்தில் 5 பேருக்கு பரிசோதனை செய்யவேண்டும் எனவும், அவர் பாட்டி இருசக்கர வாகனத்தில் அழைத்து வரமுடியாது, எனவும் ஆகவே அவர்களுக்கான கொரோனா பரிசோதனைகளை தாமதமின்றி உடனடியாக செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா வீரியமாக பரவி வரும் இச்சூழ்நிலையில், தாமாக முன் வந்து பரிசோதனை மேற்கொள்ள வந்த நபரை அலட்சியம் செய்து அனுப்பி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இப்படி அறிகுறிகளுடன் தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய நினைப்பவர்களுக்கு இந்த நிலைமை தானா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.