திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில், இன்று திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த 69 வயது பெண்மணி மற்றும் வஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த 59 வயது பெண்மணிக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இவர்களில் ஒருவர் கோவை தனியார் மருத்துவமனையிலும் மற்றொருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களால் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இன்று 383 பேர் கண்டறியப்பட்டு, அவர்களை வீட்டு கண்காணிப்பில் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம், இதுவரை 3,701 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று ஒரே நாளில் 642 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, திருப்பூரில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் பணி புரியும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.