தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,280 பேருக்கு தொற்று உறுதி..! மொத்த பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,07,001 ஆக உயர்வு! இன்று மேலும் 65 பேர் பலி!

கோவை: தமிழகத்தில் இன்று மேலும் 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,07,001 ஆக அதிகரித்துள்ளது.

கோவை: தமிழகத்தில் இன்று மேலும் 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,07,001 ஆக அதிகரித்துள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம் தற்போது தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதனிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக இருந்தது.

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 4,280 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,07,001 ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம், தமிழகத்தில் இன்று மட்டும் 2,214 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 60,592 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தற்போது வரை 1,450 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனை மையங்கள் மூலம் 13 லட்சத்து 6 ஆயிரத்து 853 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1,842 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 66,538 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, கோவையில் இன்று புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 712 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நீலகிரியில் புதிதாக 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நீலகிரியில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல, திருப்பூர் புதிதாக 2 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளது.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...