இந்திய பம்பு உற்பத்தியாளர்கள்‌ சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில்‌ பம்புசெட்டுகள் வீழ்ச்சியடைந்தது குறித்து விவாதிக்கப்பட்டது!

கோவை: இந்திய பம்பு உற்பத்தியாளர்கள்‌ சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில்‌ பம்புசெட்டுகள் வீழ்ச்சியை கண்டுள்ளது குறித்து காணொளி காட்சி மூலம்‌ பம்பு உற்பத்தியாளர்கள்‌ விவாதித்தனர்.

கோவை: இந்திய பம்பு உற்பத்தியாளர்கள்‌ சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில்‌ பம்புசெட்டுகள் வீழ்ச்சியை கண்டுள்ளது குறித்து காணொளி காட்சி மூலம்‌ பம்பு உற்பத்தியாளர்கள்‌ விவாதித்தனர்.

கடந்த ஆண்டின்‌ இந்திய பம்பு செட்டு உற்பத்தியாளர்களின்‌ விற்பனை சந்தை மதிப்பு ரூ.16,000 கோடியாக இருந்தது. அதில்‌ இந்த ஆண்டின்‌ (2020-21) முதல்‌ காலாண்டில்‌ சுமார்‌ 40% வீழ்ச்சியை கண்டுள்ளது. இதில்‌ விவசாயத்திற்கு, குடிநீர்‌ விநியோகத்திற்கு, வீட்டு உபயோகத்திற்கு மற்றும்‌ தொழிற்சாலைகளுக்கு, பயன்படும்‌ பம்புசெட்டுகள் வீழ்ச்சியை கண்டுள்ளன. சூரிய சக்தி மூலம்‌ இயங்கும்‌ பம்பு செட்டுகள்‌ மத்திய மற்றும்‌ மாநில அரசுகளின்‌ குசும்‌ திட்டத்தின்‌ மூலம்‌ விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது சுமார்‌ 75% குறைந்துள்ளது.

அதேபோல, பம்புசெட்டுகளின்‌ விற்பனை குறைந்துள்ள இந்த சூழ்நிலையில்‌ தற்போதைய பம்ப்செட்டு தேவையைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் தொழிலாளர்கள்‌ பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. புலம்‌ பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள்‌ அவர்களின்‌ மாநிலத்திற்கு சென்று விட்டதால்‌ இந்த தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த தொழிலாளர்களின்‌ பற்றாக்குறையை போக்க மாநில அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

தற்பொழுது தமிழகத்தில்‌ ஒரு மாவட்டத்தில்‌ இருந்து பொது மக்கள்‌ மற்றும்‌ தொழிலாளர்கள்‌ அடுத்த மாவட்டம்‌ செல்ல தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில்‌ இருந்து வரும்‌ தொழிலாளர்களுக்கு மாவட்ட எல்லைகளில்‌ தேவையான கொரோனா பரிசோதனைகளை செய்து, தனிமைப்‌ படுத்தப்பட்ட பிறகு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த செயற்குழு கூட்டத்தில் இந்திய பம்பு உற்பத்தியாளர்கள்‌ சங்கத்தின் முன்னாள் தலைவரும் சீமா தலைவருமான கிருஷ்ணகுமார்‌ மற்றும் கார்த்திக்‌, உப தலைவர்‌, சீமா, உப தலைவர்‌ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்‌.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...