கோவையில் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த ஆன்லைன் உரிமையாளர் கைது!

கோவை: கோவையில் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த ஆன்லைன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவையில் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த ஆன்லைன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு பகுதியில் மெரிடியா ஷேர் டிரேடிங் என்ற ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாக இயக்குனர் ரவிக்குமார்(34). இவரது பங்குதாரராக மகாதேவன், வைதீஸ்வரன், ரவிக்குமார் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக விளம்பரம் செய்து இருந்தனர். இதனை நம்பி ஏராளமானோர் பணம் முதலீடு செய்தனர்.

இதனிடையே, முதிர்வு காலம் முடிந்தும் பணத்தை திருப்பி தர காலதாமதம் செய்ததால் சந்தேகம் அடைந்த முதலீட்டாளர்கள் பணத்தை உடனடியாக திருப்பி தர வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் முறையான பதில் அளிக்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட ஒண்டிப்புதூரை சேர்ந்த லெனின் என்பவர் தன்னிடம் ஒன்றரை லட்ச ரூபாய் பெற்று கொண்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக பொருளாதார குற்ற பிரிவில் புகார் அளித்தார்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரது கூட்டாளிகளான மகாதேவன், வைத்தீஸ்வரன், ரவிக்குமாரை தேடி வருகின்றனர். இவர்கள் 4.5 கோடி ரூபாய் வரை பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...