கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகில் உள்ள ஸ்டேன்மோர் ஆத்துமட்டம் பகுதியில் வாழும் மக்களின் வீடுகளின் மேற்கூறைகள் பழுதாகியதால், மழை நீர் ஒழுகி வந்து அங்கு வசிக்கும் ஏழை மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், பழுதடைந்த வீடுகளின் கூரைகள் சிமெண்ட் கூரைத்தகடுகளை கொண்டு சீரமைக்கப்பட திட்டமிடப்பட்டது.
இதையடுத்து, தோட்ட தொழிலாளர் குடியிருப்பு ஆய்வு குழு உறுப்பினர் மற்றும் ஏடிபி தொழிற்சங்க தலைவர், வீ அமீது, வீடுகளை சீரமைக்க சிமெண்ட் கூரைத்தகடுகளை இன்று வழங்கினார்.
அப்பகுதியில் உள்ள ஏழை எளியோர் பயன் பெறும் வகையில் பழுதான வீடுகளுக்கு சிமெண்ட் தகடுகள் மாற்றப்பட்டன.
வால்பாறை மாணிக்கா N.C பகுதியில் வாழும் வார்டு கழக செயலாளர் ஜான் பீட்டர் தலைமையில், சங்க தலைவர் வால்பாறை வீ அமீது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.