கோவை: கோவையில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர் சட்டங்களை நீக்கக் கூடாது. வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், வேலை நீக்கம், சம்பள வெட்டு, அவுட் சோர்ஸிங் முறையை கைவிட வேண்டும், நிரந்தர மற்றும் கேசுவல் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு சம்பளம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பதினேழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐ.என்.டி.யு.சி, ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ், சி.ஐ.டி.யு, எல்.பி.எப் உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொழிலாளர் நலச்சட்டங்களை மத்திய அரசு சீர்குலைப்பதாகவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட உழைப்பாளி மக்களுக்கு மாதம் ரூ 7,500 வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல, கோவை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து, பிஎஸ்என்எல், மின்வாரியம், வங்கி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.