கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்!

கோவை: கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர்.


கோவை: கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நல்லடக்கம் செய்தனர்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது வீரியமடைந்து அதன் பாதிப்புகள் எதிரொலித்து வருகிறது. அதேபோல இந்த தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் பல்வேறு காரணங்களால் மரணித்தும் வருகின்றனர். 

இவ்வாறு மரணிக்கும் மனிதர்கள் தொற்றின் அச்சத்தினால் சில இடங்களில் கைவிடப்படுகின்றனர். அதேபோல, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும்போது அச்சத்தின் காரணங்களினால் சில இடங்களில் பிணக் குழிக்குள் உடல்கள் உரிய மரியாதையின்றி அடக்கம் செய்யப்படுவதாகவும் வீடியோக்கள் வெளியாகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வதாக அரசிடம் அனுமதி பெற்றனர். இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் 184 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயது முதியவர் கொரோனா தொற்றால் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் இவரது உடலை அடக்கம் செய்ய முன்வந்து கோவையில் உள்ள மயானத்தில் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தனர். கோவையில் இதுவே முதல் முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் இவ்வமைப்பால் அடக்கம் செய்யப் பட்டுள்ளதாகவும் இத்துடன் 185 பேர் தமிழ்நாடு முழுவதும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

மேலும், இந்த நல்லடக்கத்தில் அவ்வமைப்பின் நிர்வாகிகள் அகமது கபீர், முஜிபுர் ரஹ்மான், சாதிக் அலி, ரபீக், அப்பாஸ், சாகுல், ரஜாக், ஆஷிக் அஹமது, ஆசிக், பைசல், சதாம், மைதீன், ரபீக், இப்ராஹிம், திப்பு சுல்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...