கல்லூரிகளை திறக்க உத்தரவு..! ஆகஸ்ட்‌ 30ம் தேதிக்குள் பொறியியல்‌ படிப்பிற்கான கலந்தாய்வு!

பொறியியல் கலந்தாய்வை ஆகஸ்ட் மாதம் தொடங்க உயர்கல்வித் துறையின் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் கலந்தாய்வை ஆகஸ்ட் மாதம் தொடங்க உயர்கல்வித் துறையின் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கும் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கால் கலந்தாய்வு தாமதமாகி உள்ளது.

இந்நிலையில், கலந்தாய்வை நடத்துவது குறித்து உயர்கல்வித் துறையின் கவுன்சில் கூட்டம் கடந்த 29ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இயக்குநர் விவேகானந்தன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:

பிஇ, பிடெக்‌ கல்லூரிகளில்‌, இரண்டாம்‌ ஆண்டு, மூன்றாம்‌ ஆண்டு மற்றும்‌ இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட்‌ 16ம்‌ தேதியும்‌, முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம்‌ தேதியும்‌ வகுப்புகளை தொடங்க வேண்டும்‌ என்று உத்தரவிட்டுள்ளது. 

மேலும்‌, பொறியியல்‌ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வை ஆகஸ்ட்‌ 30க்குள்‌ நடத்தவும்‌ உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட்டில் முடிக்கவேண்டும் என்று பல்கலை. மானியக் குழு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...