பொறியியல் கலந்தாய்வை ஆகஸ்ட் மாதம் தொடங்க உயர்கல்வித் துறையின் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கும் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கால் கலந்தாய்வு தாமதமாகி உள்ளது.
இந்நிலையில், கலந்தாய்வை நடத்துவது குறித்து உயர்கல்வித் துறையின் கவுன்சில் கூட்டம் கடந்த 29ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இயக்குநர் விவேகானந்தன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:
பிஇ, பிடெக் கல்லூரிகளில், இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 16ம் தேதியும், முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதியும் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், பொறியியல் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வை ஆகஸ்ட் 30க்குள் நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட்டில் முடிக்கவேண்டும் என்று பல்கலை. மானியக் குழு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.