சிறுமுகை வனப்பகுதியில் தொடரும் யானைகளின் மரணம்..! நோய் தொற்று காரணமா?

கோவை: சிறுமுகை வனப்பகுதியில் தொடரும் யானைகளின் இறப்பு, வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சிறுமுகை வனப்பகுதியில் தொடரும் யானைகளின் இறப்பு, வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரக பகுதியானது தமிழக கர்நாடகா வனப்பகுதிகளை இணைக்கும் மிக முக்கிய பகுதியாக உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு எறுமை போன்ற ஏராளமான வன உயிரினங்கள் வசித்து வருகின்றன.

குறிப்பாக யானைகள் தமிழகம், கர்நாடகா, கேரளா என ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநில காடுகளுக்கு வலசை செல்ல சிறுமுகை காடுகளை கடந்தே செல்ல முடியும். இதனால் சிறுமுகை வனத்தில் எப்போதும் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில், சிறுமுகை வனப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் யானைகளின் உயிரிழப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

முதலில் நோய் தாக்கத்திற்கு ஆளாகும் யானைகள், பின்னர் இறப்பது என்பது அதிகரித்து கொண்டே செல்வதால், அதற்கான தீர்வு காண போராடி வருகின்றனர், வனத்துறையினர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பவானி சாகர் நீர் தேக்க பகுதியில் நோய்வாய்பட்டு உடல் மெலிந்து அடுத்தடுத்து இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து, கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இதேபோல் உடல்சோர்வு ஏற்பட்டு படுத்து கிடந்த யானைக்கு தற்போது வரை வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரகாலமாக சிறுமுகை வனச்சரக பகுதியான லிங்காபுரம், காந்தவயல் போன்ற பகுதிகளில் சுற்றி திரிந்த ஒரு பெண் யானை, இன்று லிங்காபுரம் பகுதியில் காந்தையாறு பகுதியில் உயிரிழந்து கிடந்தது.



இப்படி, யானைகளின் அடுத்தடுத்த உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது தெரியாமல் வனத்துறை தினறும் நிலையில் யானைகளின் இழப்பால் பெரும் அளவில் வனச்சூழல் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்துள்ள, வன ஆர்வலர்கள் சிறுமுகை வனப்பகுதியில் வன உயிரினங்களுக்கு ஏதேனும் தொற்று பரவல் உள்ளதா என கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...