கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் பெற்றோர் அரிசி, பருப்பு, முட்டை போன்றவைகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 1,697 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. சமூக நலத் துறையின், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 2 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
இங்கு அடிப்படைக் கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்டவை குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் குழந்தைகளை சுகாதாரமாக ஆரோக்கியமாக வளர்ப்பது குறித்தும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகின்றது.
அதேபோல, பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்லும் பெரும்பாலான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அங்கன்வாடி மையங்களை நம்பியே உள்ளனர். வேலைக்குச் சென்றுவிட்டு பின்னர் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதால் பெற்றோர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அங்கன்வாடி மையங்கள் உள்ளன. சுமார் 1.5 லட்சம் குழந்தைகள் அங்கன்வாடிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் வந்து கல்வி பயில வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகள் தற்போது வரமுடியாத சூழ்நிலை நிலவுவதால் அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் முட்டை போன்றவைகளை குழந்தைகளின் பெற்றோர் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ஊரடங்கு காலம் அமல்படுத்தப்பட்டது முதல் அரிசி, பருப்பு மற்றும் முட்டை ஆகியவை குழந்தைகளின் பெற்றோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான பொருட்களும் கடந்த 1ம் தேதி முதல் கொடுக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் இதனை அங்கன்வாடி மையங்களில் விலையில்லாமல் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.