மேட்டுப்பாளையத்தில் பயிர்களை நாசம் செய்ததால் காட்டுயானை சுட்டுக்கொலை - வனத்துறையினர் விசாரணையில் அம்பலம்!

கோவை: மேட்டுப்பாளையத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்திய யானை சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: மேட்டுப்பாளையத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்திய யானை சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் கூட்டம் அவ்வப்போது மலை அடிவார விவசாய நிலங்களுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் புகுந்து வந்தது.

இந்த நிலையில், இன்று வனத்தை விட்டு வெளியே வந்த பெண் காட்டு யானை ஒன்று தேக்கம்பட்டி அருகே உள்ள ஒரு விவசாய நிலத்தில் உணவு மற்றும் தண்ணீரினை தேடி வந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.



பத்ரகாளியம்மன் கோவில் பின்புறம் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்தில் இறந்துள்ள பெண் காட்டு யானைக்கு காதில் ரத்தம் வழிந்தபடி உள்ளதால் யானை இயற்கையாக உயிரிழந்ததற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் மர்மநபர்களால் யானை தாக்குதலுக்கு உள்ளானதா என மேட்டுப்பாளையம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், கோவையில் இருந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு யானைக்கு பிரேத பரிசோதனையானது நடைபெற்றது. இதில் அதிர்ச்சி உண்மை வெளிப்பட்டது.

யானையின் உயிரிழப்பிற்கான காரணம் அதன் தலைப்பகுதியில் காது அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து மூளையை தாக்கி யானை உயிரிழந்துள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரேத பரிசோதனையின் போது யானையின் தலைப்பகுதியில் நாட்டு துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ஈயக்குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் யானை உயிரிழந்த தோட்டத்தின் உரிமையாளரான இராமசாமி மற்றும் அவரது சகோதரர் கிருஷ்ணசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்களது விவசாய பயிர்களை தொடர்ந்து யானை நாசம் செய்து வந்ததால் சுட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விவசாய பயிர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக யானையை சுட்டுக் கொன்ற சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...