நீலகிரி: கூடலூரில் போலீசார் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி லாரி ஒட்டுனர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூடலூர் எம் ஜி ஆர் நகர் பகுதியில் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் கூடலூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் தியாகராஜா (52) என்பவர் நந்தட்டி பகுதி வழியாக கூடலூர் நோக்கி லாரியை ஒட்டி வந்துள்ளார்.
அப்போது, லாரி ஆட்டோ ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த எஸ்ஐ மணி துரை இது தொடர்பாக விசாரணை நடத்திய போது ஆவணங்களை எடுக்க லாரிக்குள் ஏறிய ஒட்டுனர் தியாகராஜா திடீரென லாரியில் இருந்த மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சைக்குப் பின் உடலில் 45% தீக்காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து கூடலூர் டிஎஸ்பி தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூடலூர் ஆர்டிஒ ராஜ்குமாரும் பாதிக்கப்பட்ட ஒட்டுநரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது, தன்னை எஸ்ஐ மணிதுரை தகாத வார்த்தைகளால் தொடர்ந்து திட்டியதால் மனமுடைந்து தீ வைத்துக் கொண்டதாக ஒட்டுனர் தியாகராஜா தெரிவித்ததாக கூறிய லாரி ஒட்டுனர்கள், காவல் துறையினர் லாரி ஒட்டுனர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதும், தேவையற்ற அபராதம் விதிப்பதும் தொடர்ந்து வருகின்றது என்றும் இதனால் கொரோனா ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டத்தில் இருக்கும் ஒட்டுனர்கள் இது போன்ற முடிவுகளுக்கு வந்து விடுவதாகவும், போலீசாரின் கெடு பிடிகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, சம்மந்தப்பட்ட லாரி ஒட்டுனர் போதையில் விபத்து ஏற்படுத்தியதாகவும், விசாரணைக்குச் சென்ற எஸ்ஐ ஆவணங்களை காட்டச் சொல்லி கேட்ட போது, அவர் எதிர்பாராத விதமாக தீ வைத்துக் கொண்டதாகவும், தொடர் விசாரணையில் சரியான தகவல் தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் காவல் துறை தாக்குதலில் வியாபாரிகள் இறந்த சம்பவம் பரபரப்பான விசாரணையில் உள்ள நிலையில், கூடலூரில் காவல் துறையினர் திட்டியதாக கூறி லாரி ஒட்டுனர் தீ வைத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.