கோவையில் தனியார்‌ மருத்துவமனைகள்‌ அரசு வழங்கியுள்ள நெறிமுறைகளின்படி நோய்‌ தடுப்பு மற்றும்‌ சிகிச்சைகள்‌ மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல்!

கோவை: கோவை மாவட்டத்திலுள்ள தனியார்‌ மருத்துவமனைகள்‌ அரசு வழங்கியுள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி நோய்‌ தடுப்பு மற்றும்‌ சிகிச்சைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌ என இணை இயக்குநர்‌ (மருத்துவம்‌ மற்றும்‌ ஊரக நலப்பணிகள்‌) கிருஷ்ணா அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

கோவை: கோவை மாவட்டத்திலுள்ள தனியார்‌ மருத்துவமனைகள்‌ அரசு வழங்கியுள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி நோய்‌ தடுப்பு மற்றும்‌ சிகிச்சைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌ என இணை இயக்குநர்‌ (மருத்துவம்‌ மற்றும்‌ ஊரக நலப்பணிகள்‌) கிருஷ்ணா அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து இணை இயக்குநர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களின்‌ அறிவுறுத்தலின்படி, கொரோனா தொற்று தடுப்பு மற்றும்‌ சிகிச்சைகள்‌ தொடர்பான ஆய்வுகள்‌ மாவட்ட இணை இயக்குநரால்‌ தனியார்‌ மருத்துவமனைகளில்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தனியார்‌ மருத்துவமனைக்கு வரும்‌ நோயாளிகள்‌ மற்றும்‌ உடனாளர்கள்‌ கண்டிப்பாக முகக்கவசம்‌ அணிந்து வருவதை கண்காணிக்க வேண்டும்‌. அனைத்து மருத்துவமனைகளிலும்‌ நுழைவாயிலில்‌ நன்கு கைகழுவ தண்ணீர் இணைப்புடன்‌(Elbow Tap) அமைத்திட‌ வேண்டும்‌. கைகழுவ தேவையான சோப்பு மற்றும்‌ சோப்பு ஆயில்‌ கண்டிப்பாக வைத்திருத்தல்‌ வேண்டும்‌. கைகழுவும்‌ வழிமுறைகளை விளக்கப்படமாக கைகழுவுமிடத்தில்‌ வைக்க வேண்டும்‌. மருத்துவமனைக்கு வரும்‌ அனைவரும்‌ கைகழுவிய பின்பு உரிய கிருமி நாசினி திரவம்‌ கொண்டு கைகளை தூய்மைப்படுத்திய பின்பே மருத்துவமனையின் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும்‌.

மருத்துவமனையின்‌ நுழைவு வாயிலில்‌ நோயாளிகள்‌ உதவி மையம் ஏற்படுத்தி 24x7 நோயாளிகளுக்கு உரிய தகவல்கள்‌ தெரியப்படுத்த வேண்டும்‌. நோயாளிகள்‌ மற்றும்‌ அவருடன்‌ வரும்‌ உதவியாளர்கள்‌ கண்டிப்பாக தனிமனித இடைவெளி மற்றும்‌ சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்‌. இதற்கான உரிய ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகம்‌ செய்திருத்தல்‌ வேண்டும்‌.

நோய்‌ தொற்று தடுத்தல்‌ மற்றும்‌ பாதுகாப்பு விழிப்புணர்வு பலகைகள் மற்றும்‌ சுவரொட்டிகள்‌ அனைத்து இடங்களிலும்‌ அனைவருக்கும்‌ தெரியும் படியான இடங்களில்‌ வைத்திருக்க வேண்டும்‌. மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளுக்கும்‌, வழிகாட்டி பலகைகள்‌ கண்ணில்‌ தெரியும்படி வைத்திருத்தல்‌ வேண்டும்‌.

காய்ச்சல்‌ பகுதி மற்றும்‌ கொரோனா பரிசோதனை பகுதி தனியாக அமைத்திருத்தல்‌ வேண்டும்‌. மருத்துவர்கள்‌ மற்றும்‌ செவிலியர்கள்‌, சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ அனைவருக்கும்‌ கண்டிப்பாக உரிய பாதுகாப்பு கவசங்கள்‌ மற்றும்‌ உபகரணங்கள்‌ வழங்கப்பட்டு இருக்க வேண்டும்‌.

தற்போது நடைமுறையில்‌ உள்ள அரசு விதிகளின்படி மருத்துவ கழிவுகளை சேகரித்து வகைப்படுத்தி அரசு பதிவு பெற்ற மருத்துவ கழிவுகளை எடுத்துச் செல்லும்‌ நிறுவனத்திடம்‌ உரிய பாதுகாப்பு விதிகளின்படி ஒப்படைத்தல் வேண்டும்‌. நோய்‌ தொற்று பரவாமல்‌ இருக்கும்‌ பொருட்டு அரசு நிர்ணயித்துள்ள கிருமி நாசினிகள் கொண்டு முழு மருத்துவமனையை தினமும்‌ குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை தூய்மைப்படுத்துதல்‌ வேண்டும்‌.

அவசர சிகிச்சைக்கு வரும்‌ நோயாளிகளை கொரோனா நோய்‌ பரிசோதனை செய்யவில்லை என்று முதலுதவி செய்யாமல்‌ உடனே திருப்பி அனுப்பக்‌ கூடாது. முதலுதவி செய்து உரிய மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து கண்காணிக்க வேண்டும்‌.

காய்ச்சல்‌ மற்றும்‌ கொரோனா நோயாளிகளுக்கு அரசு வழங்கியுள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி நோய்‌ தடுப்பு மற்றும்‌ சிகிச்சைகள்‌ செய்யப்பட வேண்டும்‌. இதன்‌ விபரங்களை மாவட்ட இணை இயக்குநர்‌, மருத்துவம்‌ மற்றும்‌ ஊரக நலப்‌ பணிகள்‌, மாவட்ட துணை இயக்குநர்‌, சுகாதாரப்‌ பணிகள்‌ மற்றும்‌ மாநகராட்சி சுகாதார அலுவலர்‌ ஆகியோருக்கு கண்டிப்பாக தெரியப்படுத்தல்‌ வேண்டும்‌.

அரசின்‌ வழிகாட்டுதல்களை மீறும்பட்சத்தில்‌ தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள்‌ (முறைப்படுத்துதல்‌) சட்டம்‌ 1997 விதிகள்‌ 2018-ன்படி உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌ என இணை இயக்குநர்‌(மருத்துவம்‌ மற்றும்‌ ஊரக நலப்பணிகள்‌) கிருஷ்ணா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...