கோவையில் ரூ.5.78 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை மற்றும் ரூ.4.12 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்!

கோவை: கோவை மாவட்டம்‌ தொண்டாமுத்தூர்‌ ஊராட்சி ஒன்றியம்‌ மற்றும்‌ ஆலாந்துறை பேரூராட்சி ஆகிய பகுதிகளில்‌ முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்த உள்ளாட்சித்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி, பல்வேறு புதிய பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்‌.

கோவை: கோவை மாவட்டம்‌ தொண்டாமுத்தூர்‌ ஊராட்சி ஒன்றியம்‌ மற்றும்‌ ஆலாந்துறை பேரூராட்சி ஆகிய பகுதிகளில்‌ முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்த உள்ளாட்சித்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி, பல்வேறு புதிய பணிகளுக்கான பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்‌.

கோவை மாவட்டம்‌, தொண்டாமுத்தூர்‌ ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளான இக்கரைபோளுவாம்பட்டி, மத்வராயபுரம்‌, ஆகிய ஊராட்சிகள்‌ மற்றும்‌ ஆலாந்துறை பேரூராட்சி ஆகிய பகுதிகளில்‌ நேற்று(30.06.2020) நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து, பல்வேறு புதிய பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராமதுரைமுருகன்‌, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்‌ திட்ட இயக்குநர்‌ கி.ரமேஷ்குமார்‌, தொண்டாமுத்தூர்‌ ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்‌ மதுமதி விஜயகுமார்‌, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்‌ பிரதீப்‌, உதவி இயக்குநர்‌(பேரூராட்சிகள்‌) துவராகநாத்சிங்‌ மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

கோவை மாவட்டத்தில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டம்‌, மேம்படுத்தப்பட்ட சாலைகள்‌, காந்திபுரம்‌ முதலடுக்கு மற்றும்‌ இரண்டாம்‌ அடுக்கு மேம்பாலங்கள்‌,

வெள்ளலூர்‌ ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்‌, அத்திக்கடவு அவினாசி திட்டம்‌ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி கோயம்புத்தூர்‌

மாவட்டத்தில்‌ 50 ஆண்டுகளுக்கான திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில்‌ செயல்படுத்தப்பட்டுள்ளது.

நகரப்பகுதிகளுக்கு இணையாக பல்வேறு மேம்பட்ட வளர்ச்சி பணிகளை கோயம்புத்தூர்‌ மாவட்டத்தின்‌ அனைத்து பேரூராட்சி மற்றும்‌ ஊராட்சி

பகுதிகளில்‌, சாலை, குடிநீர்‌, சிறுபாலங்கள்‌, பள்ளி வகுப்பறை கட்டிடங்கள்‌, கழிப்பறைகள்‌, அங்கன்வாடி மைய கட்டிடங்கள்‌ போன்றவற்றை சிறப்பாக அமைத்து வளர்ச்சி திட்டப்பணிகள்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில்‌, மத்வராயபுரம்‌ ஊராட்சியில்‌ ரூ.9.08 இலட்சம்‌ மதிப்பில்‌ தொம்புலிபாளையம்‌ அங்கன்வாடி மைய கட்டிடம்‌ கட்டும்‌ பணி, ஆலாந்துறை பேரூராட்சியில்‌ மூங்கில்மடைக்குட்டை பகுதியில்‌ குடிசை மாற்று வாரியம்‌ மூலம்‌ ரூ.5.50 கோடி மதிப்பில்‌ 64 குடியிருப்புகள்‌ கட்டும்‌ பணி, மத்வராயபுரம்‌ ஊராட்சி இருட்டுப்பள்ளம்‌ சிறுவாணி மெயின்‌ ரோடு முதல்‌ ஸ்ரீகார்டன்‌ வரை ரூ.10.00 இலட்சம்‌ மதிப்பில்‌ கான்கிரீட்‌ சாலை அமைக்கும்‌ பணி, ரூ.9.08 இலட்சம்‌ மதிப்பில்‌ நல்லூர்பதியில்‌ அங்கன்வாடி மைய கட்டிடம்‌ கட்டும்‌ பணி, என மொத்தம்‌ ரூ.5.78 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்‌.

மேலும்‌, ஆலாந்துறை பேரூராட்சியில்‌ முதலீட்டு மானிய நிதியிலிருந்து ரூ.19.64 இலட்சம்‌ மதிப்பில்‌ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்‌ கட்டப்பட்ட 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள்‌, ரூ.2.47 இலட்சம்‌ மதிப்பில்‌ அமைக்கப்பட்ட ஸ்மார்ட்‌ கிளாஸ்‌, இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சியில்‌ நபார்டு திட்டத்திலிருந்து ரூ.320.00 இலட்சம்‌ மதிப்பில்‌ செம்மேடு சாலை முதல்‌ தொம்புலிபாளையம்‌ நொய்யல்‌ ஆறு வரை அமைக்கப்பட்ட உயர்மட்ட பாலம்‌, மத்வராயபுரம்‌ ஊராட்சியில்‌ தாய் சேமிப்பு நிதியிலிருந்து ரூ.12.00 இலட்சம்‌ மதிப்பில்‌ தொம்புலிபாளையத்தில்‌ அமைக்கப்பட்ட பயணிகள்‌ நிழற்குடை, ஏஞ்சல்‌ கார்டன்‌ பகுதியில்‌ அம்மா பார்க்‌ திட்டத்திலிருந்து ரூ.30.00 இலட்சம்‌ மதிப்பில்‌ அமைக்கப்பட்ட அம்மா பார்க்‌, அம்மா ஜிம்‌, இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சி செம்மேடு காந்தி காலனியில்‌ ரூ.16.85 இலட்சம்‌ மதிப்பில்‌ கட்டப்பட்ட பல்நோக்கு மையக்கட்டிடத்திற்கு உணவுக்கூடம்‌, ரூ.11.13 இலட்சம்‌ மதிப்பில்‌ அமைக்கப்பட்ட உணவு தானிய கிடங்கு என மொத்தம்‌ ரூ.4.12 கோடி மதிப்பிலான கட்டிடங்களை பொதுமக்களின்‌ பயன்பாட்டிற்கு அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ திறந்து வைத்தார்‌.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...