திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களுக்கு கோவை மாவட்டத்தில் வழங்கிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும் தமிழக அரசின் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் இணைந்து தமிழகத்தின் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் 12 உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கான திட்டங்களை விவசாயிகளின் நிலங்கள் வழியாக செயல்படுத்தப்பட உள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உயர் மின் கோபுரங்களுக்கு பதிலாக சாலையோரமாக கேபிள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். நில அளவீடு செய்து நிலங்களுக்கான இழப்பீடு வழங்காத நிலையில் தற்போது மின் கோபுரம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த செம்மிபாளையம் பூமலூர் உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்கள் வழியாக இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பாதிக்கப்படும் நிலத்திற்கு இழப்பீடு வழங்க கோவை மாவட்டத்தில் பின்பற்றிவரும் கணக்கீட்டு முறையை பின்பற்றி, திருப்பூர் மாவட்டத்தில் வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஒட்டுமொத்த முறையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என வற்புறுத்தினர். இதையடுத்து, காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.