திருப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்வு..! மாநகராட்சி சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 141 ஆக உயர்வடைந்ததைத் தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 141 ஆக உயர்வடைந்ததைத் தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் 141 பேர் பாதிக்கப்பட்டு 117 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில தினங்களாக திருப்பூரில் இருந்து வெளி மாவட்டத்திற்கு சென்று வந்தவர்களால் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்த 66 வயது ஆண் ஒருவர், தொழில் நிமித்தமாக மதுரை சென்று வந்த நிலையில், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனை தொடர்ந்து, கொரோனா தொற்று சிகிச்சைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது. 

இதனையடுத்து, முதியவர் இருந்த பகுதியிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் அருகில் இருந்த பொதுமக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 



தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் 2,771 பேர் தனிமைபடுத்தபட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அந்த முதியவர் வசித்த அங்கேரிபாளையம் பகுதியில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...