கோவை: காரமடையில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு கொரானோ தொற்று உறுதியானதால் அந்த மருத்துவமனை மாவட்ட நிர்வாகத்தால் மூடப்பட்டது.

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையத்தில் செளமியா கிளீனிக் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று அதே பகுதியைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் அறுவை சிகிச்சைக்காக வந்த நிலையில் அவருக்கு கொரானோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று அந்த பெண்ணிற்கு கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த மருத்துவமனையில் ஏற்கனவே பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை இருந்த மற்ற நோயாளிகள் அவசர அவசரமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, அந்த மருத்துவமனை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் ஒருவார காலத்திற்கு மூடப்பட்டுள்ளது.

மேலும், தீயணைப்புத்துறை வாகனம் மூலம் சுகாதாரத்துறை மற்றும் சிக்காரம்பாளையம் ஊராட்சி சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கையாக மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல, கொரானோ தொற்று பாதித்த அந்த பெண் வசித்த பகுதிக்கு சீல் வைத்துள்ள நிலையில், அங்கும் சுகாதார பணிகள் முடுக்கிவிடபட்டுள்ளன.