கோவை: கோவையில் திமுக பிரமுகர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பாட்டில்களை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் திமுக பிரமுகர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பாட்டில்களை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவைப்புதூர் பகுதியில் வசித்து வரும் முத்துச்சாமி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் முத்துசாமி வீட்டின் மீது இரண்டு பாட்டில்களை வீசி சென்றுள்ளனர். இன்று காலையில் முத்துசாமி வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்த பொழுது கார் அருகே வீசப்பட்ட ஒரு மதுபாட்டில் உடைந்திருப்பதும் மற்றொரு மதுபாட்டில் உடையாமல் வளாகத்தில் இருப்பதை பார்த்து உள்ளார்.
இதுகுறித்து இன்று காலை முத்துசாமி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீசப்பட்ட இரு பாட்டில்களும் சாதாரணமான மதுபாட்டில்கள் தான் என்றும் கார் கண்ணாடியை உடைக்க மர்ம நபர்கள் முயற்றுள்ளதாக முத்துசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள குனியமுத்தூர் போலீசார் மதுபாட்டில்கள் வீசிய சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக பிரமுகர் வீட்டில் பாட்டில்கள் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.